இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவர்களை தாக்கிய அனைவரையும் உடனடியாக மேற்குவங்க அரசு கைது செய்ய வேண்டும்.
மே.வங்கத்தில் மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை!
சென்னை: மேற்குவங்கத்தில் மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்கு உள்ள உரிமையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொச்சைப் படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. மம்தா பானர்ஜி அரசின் மருத்துவர்கள் விரோதப் போக்கை எதிர்த்து உறுதியுடன் போராடும் அதே வேளையில், மத்திய பாஜக அரசின் அரசியல் சூழ்ச்சிகளையும் மருத்துவர்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் போராட முன்வர வேண்டும் என, போராடும் மருத்துவர்களை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.