சென்னை:ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள மின்சாரம் திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுகவும் ஏற்காது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஏற்க மாட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாவது நாளான இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'திமுகவின் 23 அணிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்கு சேகரித்து சிறப்பாக செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் 100 விழுக்காடு திமுக வேட்பாளர் வெற்றி பெற்று டெல்லிக்குச் செல்வார்கள்' எனத் தெரிவித்தார்.
'மாதத்திற்கு மின் கட்டணம் உயரும் என்பது தவறு. ஒன்றிய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு போதும் ஏற்க மாட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணிக் கட்சி வெற்றி பெறப்போகிறது என்பதைப் பாருங்கள். திமுக அதற்கான பணிகளை மேற்கொள்ளும்' என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அண்ணாமலை விமான கதவைத் திறந்து குறித்து ஒன்றிய அமைச்சரே ஒத்துக்கொண்டார். அப்படி இருக்க பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பச்சை பொய் சொல்கிறார். தேர்தலில் நோட்டாவுடன் போட்டிப்போடக்கூடிய கட்சிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுக ஏற்காது: அமைச்சர்
ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்த சட்டத்தை ஒருபோதும் திமுக ஏற்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
DMK will never accept the Electricity Amendment Act to be brought by the Union Government says Minister