தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 3, 2021, 11:01 AM IST

Updated : May 3, 2021, 1:16 PM IST

ETV Bharat / state

அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்

திமுக
திமுக

10:57 May 03

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (மே.4) செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Last Updated : May 3, 2021, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details