தமிழ்நாடு முழுவதும் வடக்கிழக்குப் பருவ மழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சென்னை அண்ணா அறிவாயத்தில் வழங்கப்பட்டது.