தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கு: முடித்து வைத்த நீதிமன்றம்!

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

disposed-land-grabbing-cases-against-assembly-speaker-appavu
disposed-land-grabbing-cases-against-assembly-speaker-appavu

By

Published : Mar 4, 2022, 10:26 PM IST

சென்னை :திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதேபோல, தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு மனுக்களும், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

சபாநாயகர் அப்பாவு

அப்போது, அப்பாவுக்கு எதிரான வழக்கை முழுமையாக விசாரித்ததாகவும், தவறான தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அப்பாவு மற்றும் தாமோதரன் தாக்கல் செய்த மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : 'திமுகவினருக்கு பதவி வெறி' - கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details