தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Vice Chancellor Surappa case update
துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

By

Published : Dec 15, 2020, 4:56 PM IST

Updated : Dec 15, 2020, 5:10 PM IST

16:52 December 15

சென்னை:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் படி, ஒருவர் இரு முறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது எனவும்,  சூரப்பா கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐஐடி-யில் இயக்குனராக பதவி வகித்துள்ளார். 2016 -2017ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐஐடி இயக்குனர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது என்றும், அந்த அடிப்படையில் ஏற்கனவே இரு முறை பதவி வகித்துள்ள சூரப்பாவை, அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐஐடி இயக்குனர், இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:சூரப்பா விவகாரம்! - அண்ணா பல்கலை. பதிவாளரிடம் விசாரணை!

Last Updated : Dec 15, 2020, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details