கரோனா சிகிச்சை முடிந்து இன்று பணிக்கு திரும்பிய தியாகராய நகர் துணை ஆணையர் அசோக் குமாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கரோனாவை வென்ற தி.நகர் துணை ஆணையர்: காவல் ஆணையர் வாழ்த்து
சென்னை: கரோனாவிலிருந்து மீண்ட சென்னை துணை ஆணையர் அசோக் குமார், மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், அவரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
காரோனாவிலிருந்து மீண்டு வந்த துணை ஆணையாள காவல் ஆணையர் வரவேற்க்கும் காட்சி
அதைத் தொடர்ந்து, மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர்கள் ஓய்வு அறையை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாம்பலம் துணை ஆணையர் அசோக் குமார் கூறியதாவது, ”கடந்த மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்த சமயத்தில் காவல்துறை அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் எனக்கு மிக ஆறுதலாகவும், மன உறுதியையும் அளித்தனர்.
இதனால் தற்போது முழு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளேன். ஆகையால் இந்நோய் அறிகுறி இருந்தாலும், மன உறுதியோடும் தைரியத்தோடும் போராடினால் வெகு விரைவாக குணமடையலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆர்ப்பாட்டம் இல்லாமல் 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் பினராயி