தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு கல்வி மிக அவசியம் - துணை முதலமைச்சர்

சென்னை: மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி அவசியம் என்றும், குறிப்பாக பெண்களுக்கு மிக அவசியம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

By

Published : Aug 31, 2019, 12:48 AM IST



சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் அவர் பேசுகையில்,

"மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி அவசியம். குறிப்பாக பெண்களுக்கு மிக அவசியம்.

5520 பழைய தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடியில் வாழ்ந்த சங்க கால தமிழர்கள் வேளாண்மையும், கால்நடையையும் முதன்மை தொழிலாக கொண்டது அகழ்வாராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

வாழ்வில் வெற்றி பெற்று சாதனை படைக்க கடினமாக உழைக்க வேண்டும். கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பிவி சிந்து, இளவேனில், வாலறிவன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் சாதித்துள்ளனர். எதிர்காலத்தில் ஏராளமாக வாய்ப்புகள் மாணவர்களுக்கு காத்திருக்கின்றன. வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தால் தான் வெற்றியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மாணவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடாமல் தனியாக உழைத்து வெற்றி அடைய வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details