கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் விமர்சித்து பேசினார்.
அதில், மத்திய பாஜக அரசின் மேஸ்திரி போல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். வயலில் வேலை பார்க்கும் வேலையாட்களை கண்காணிக்க உள்ள மேஸ்திரி போல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார் என பேசினார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைசருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய சீமானை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:
மரச்சாமன் குடோனில் பயங்கர தீ விபத்து!