தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக எடுப்பதற்கு எதிரான தீபாவின் வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்குத் தடை விதிக்கக்கோரிய தீபாவின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

court
court

By

Published : Jun 2, 2020, 8:15 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல். விஜய்யும், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரியும் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இதில், கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'குயின்' என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். இந்தத் திரைப்படங்களையும், சீரிஸையும் எடுப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில், ஜெயலலிதாவின் சட்ட வாரிசான தன்னிடம் முறையான அனுமதி பெறாமல், திரைப்படங்களும், வெப் சீரிஸும் எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவற்றுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பையா, ஆர். பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கரோனோ ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

தீபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன், ஏற்கெனவே குயின் வெப் சீரிஸ் இணையதளத்தில் வெளியாகி விட்டதால், வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சிறைக் கைதிகளில் எத்தனை பேருக்கு கரோனா: அரசுக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details