கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே, விதிகளை மீறி வெளியே செல்பவர்கள், பயணிப்பவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.