சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 7.5.2021 முதல் 29.12.2022 வரை பொது வினியோக திட்ட பொருட்களை கடத்தியதாக 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டு, 13,52,49,711 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 07.05.2021 முதல் 29.12.2022 வரையிலான காலக்கட்டத்தில் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்கள் கடத்தியதாக மொத்தம் 14,514 வழக்குகள் குடிமை வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினால் பதிவு செய்யப்பட்டு, 1,03,056 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் 32,300 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1,969 சிலிண்டர்களும், 6,27,400 லிட்டர் கலப்பட டீசல் உள்பட கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் ரூ.13,52,49,711 மதிப்பிலான பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு தொடர்புடைய 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.