சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சில நபர்கள் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக காவல் துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (ஆக.18) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் செல்வா தலைமையில், தொண்டர்கள் பலர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.