சென்னை:தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா கரோனாவை எதிர்கொள்வதற்கு முன்பிலிருந்தே இந்தியப் பொருளாதாரம் நலிந்துபோய் இருந்தது.
கரோனா தொற்று ஏற்பட்டதும் மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த நிலைக்கு மோடியின் தவறான கொள்கைதான் காரணம்.
டிஜிட்டல் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் வரிதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். ஸ்மார்ட்போன் வாங்க வசதி இல்லாத குழந்தைகள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் என புதிய ஏற்றத்தாழ்வை இந்தியா முழுவதும் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசின் கொள்கை இந்தியாவை நாசப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
கொங்குநாடு கோரிக்கை