தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானம் மூலம் சென்னை வந்த 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

சென்னை: தமிழ்நாட்டிற்கு இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் வந்தடைந்தன.

விமானம் மூலம் சென்னை வந்த 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள்!
விமானம் மூலம் சென்னை வந்த 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள்!

By

Published : Jun 1, 2021, 12:51 PM IST

தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதோடு தடுப்பூசிகள் போடுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழ்நாடு அரசு ஈடுப்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு கடந்த சில நாள்களாக தடுப்பூசிகள் வரவில்லை.

இந்நிலையில் நேற்று (மே.31) பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவைகள் அனைத்தும் சென்னையிலுள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன.

18 பார்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பார்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமான நிலைய அலுவலர்கள் அந்த தடுப்பூசி மருந்து பார்சல்களை தனியார் மருத்துவமனை ஏஜென்சிகளிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details