கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
ஒரு வேளை கரோனாவா இருக்குமோ...வீட்டிலிருந்தவரை மருத்துவமனையில் அனுமதித்த அலுவலர்கள்!
சென்னை அசோக்நகரில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் இழுத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
coronavirus
அதேபோல் கரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து சென்னை அசோக் நகர் பகுதியில் கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு பொது மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் அவரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Last Updated : Mar 19, 2020, 7:46 PM IST