தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா கடந்து வந்த பாதை...!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களை ஒரு புதிய-இயல்பு (New-Normal) நிலைக்கு இந்த கரோனா நோய்த்தொற்று தள்ளியிருக்கிறது. அதன் பாதிப்பு உலகெங்கும் பெருவாரியாகப் பரவி, இன்றும் உருமாற்றம் அடைந்துவருகிறது. அது தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கங்கள் கடந்து வந்த பாதையை இதில் காண்போம்.

By

Published : Feb 21, 2022, 2:16 PM IST

தமிழ்நாட்டில் கரோனா கடந்து வந்த பாதை..!
தமிழ்நாட்டில் கரோனா கடந்து வந்த பாதை..!

வூஹான் முதல் மதுரை வரை

  • டிசம்பர் - 31, 2019: சீனாவின் வூஹான் நகரில் காரணம் அறிய இயலாத நுமோனியா (pneumonia) நோய்த்தொற்று பாதிப்புகள் காணப்பட்டது
  • ஜனவரி - 7, 2020: புதிய வகை கரோனா வைரஸ் காரணம் கண்டறியப்பட்டு “2019 n-cov" என்று பெயரிடப்பட்டது
  • ஜனவரி - 30, 2020: பொதுமக்கள் சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார மையம் அறிவித்தது
  • மார்ச் - 11, 2020: கரோனா வைரஸை பாண்டமிக்(Pandemic) என்று அறிவிக்கப்பட்டது
  • ஜனவரி - 27, 2020: இந்தியாவின் முதல் கரோனா தொற்று பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது
  • மார்ச் -7, 2020: தமிழ்நாட்டின் முதல் கரோனா தொற்று பாதிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது
  • மார்ச் - 16, 2020: கரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து முதல் நோயாளி குணமடைந்தார்.
  • மார்ச் -25, 2020: கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டின் முதல் உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்தது

தமிழ்நாட்டில் கரோனா முதல் அலை

  • மே - 31, 2020: 1,149 கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியிருந்தது
  • ஜூலை - 27, 2020: 6,993 ஆக கரோனா பாதிப்பு உயர்வு
  • ஆகஸ்ட் -15, 2020: 127 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு
  • ஜூலை - 25 , 2020: 7,758 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
  • டிசம்பர் -29, 2020: 957 கரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது
  • டிசம்பர் - 14, 2020: புதிய கரோனா நோய்த் தொற்று வகையான ‘Alpha varient' லண்டனில் கண்டறியப்பட்டது.
  • டிசம்பர் - 23 , 2020: பீட்டா(Beta) வகையான கரோனா பாதிப்புடன் தென்னாப்ரிக்காவில் இருந்து லண்டனிற்கு பயணம் மேற்கொண்ட நபர் கண்டறியப்பட்டார்
  • ஜனவரி - 6, 2021: கரோனா காமா (gamma) வகைத் தொற்று, பிரேசிலில் இருந்து ஜப்பானிற்கு பயணம் செய்த நபரிடம் கண்டறியப்பட்டது
  • மே - 31, 2021: டெல்டா வகை கரோனா தொற்று இந்தியாவில் பெயரிடப்பட்டது

கரோனா இரண்டாம் அலை

  • மார்ச் - 19, 2021: 1,087 கரோனா தொற்று பாதிப்பு பதியப்பட்டது
  • மார்ச் - 21 , 2021: 36,184 கரோனா பாசிட்டிவ் பாதிப்புகள் பதிவு
  • மே - 30, 2021: 493 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்
  • ஜூன் - 4 ,2021: 33,646 பேர் குணமடைந்தனர்.
  • நவம்பர் - 1 ,2021: 990 கரோனா தொற்று பாதிப்பு பதிவு
  • நவம்பர் - 24 ,2021: ஒமைக்ரான் வகை கரோனா தொற்று தென்னாப்பிரிக்கவில் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.

கரோனா மூன்றாம் அலை

  • டிசம்பர் - 31, 2021: 1,155 கரோனா தொற்று பாதிப்பு
  • ஜனவரி - 22, 2022: 30,744 கரோனா தொற்று பாதிப்பு
  • ஜனவரி - 27,2022: கரோனா பாதிப்பால் 53 பேர் உயிரிழப்பு
  • ஜனவரி - 27,2022: 28,620 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 949 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details