சென்னையில் விரைவில் நகர்புறப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காலகட்டமும் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் என்னவெல்லாம் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதன் செலவுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்களுடன், மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தகவல்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், மழை ஒன்றே பூமிக்கு வான் தருகின்ற வாழ்வாதாரம். அத்தகைய மழைநீரை சேமிக்க அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சலையோர மழைநீர் சேகரிப்பு மையங்கள், உரை கிணறுகள், பயன்பாடற்ற சமுதாய கிணறுகளைக் கண்டறிந்து புனரமைப்புச் செய்தல் போன்ற பணிகள் செய்வதில் இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது.
இந்தியாவில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பூங்கா, சிறுவர்களுக்கு போக்குவரத்து, சமிக்ஞைகள் அடங்கிய பூங்கா, பசுமை பரப்பை அதிகரிக்க அம்ருத் திட்டம், புயல், மழை, வெள்ளத்திலும் நம் மண்ணை காக்க அடர் காடுகள் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன.