தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 3, 2020, 8:17 PM IST

ETV Bharat / state

சென்னையில் கரோனா சிகிச்சைக்கு மாநகராட்சிப் பள்ளிகள் தயார்!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்து சிகிச்சையளிக்க சென்னையில் 50 மாநகராட்சிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

chennai
chennai

சென்னை மாநகராட்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து, சிகிச்சையளிப்பதற்கேற்ப வசதியாக பள்ளிகளை தூய்மைப்படுத்தி, தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

56 மாநகராட்சிப் பள்ளிகளில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டு அளவில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜிவ் காந்தி, கீழ்பாக்கம், ஓமந்தூரார் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நபர்களால், இந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி விட்டன.

இத்தகையச் சூழலில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பாதிக்கப்படும் மக்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து, சிகிச்சையளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசுப் பள்ளிகளை தூய்மைப்படுத்தி, தயார் நிலையில் வைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் உள்ள 56 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தேவைப்பட்டால், நோயாளிகள் தனிமைப்படுத்த உட்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் பரவும் இஸ்லாமிய வெறுப்புவாத நோய்!

ABOUT THE AUTHOR

...view details