தலைமைச்செயலகம் வரும் அனைத்து பார்வையாளர்கள், ஊழியர்கள், காவல் துறை அலுவலர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்த பிறகே உள்ளே வர வேண்டும் என்று ஏற்கனவே தலைமைச்செயலர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்று சோதித்து கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். கடந்த வாரம் சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், சட்டப்பேரவையில் முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் நேற்றைய தினமும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகச் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது நேற்று மதியம் முதல் சட்டப்பேரவையில் மறு உத்தரவு வரும்வரை பார்வையாளர்களுக்குத் தடைவிதித்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.
தலைமைச்செயலகத்தில் கொரோனா வைரஸ் சோதனை தீவிரம் இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் முழுவதுமாக லைசால் கலந்த தண்ணீரை அடிக்கும் பணியில் கடந்த ஒருவார காலமாகவே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இன்றும் சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயிலில் நுழையும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற பரிசோதனையை மாநகராட்சி சுகாதாரத் துறை ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்