தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கரோனா பாதிப்பு 172ஆக உயர்வு

சென்னை: 172 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

chennai
chennai

By

Published : Apr 10, 2020, 9:50 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 93 ஆயிரத்து 14 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். இன்று 45,758 பேர் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பினை முடித்துள்ளனர்.

தற்போது 93 ஆயிரத்து 146 பேர் 28 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 168 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 8,410 நபர்களின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இவர்களில் 911 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,838 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 661 நபர்களின் ரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இன்று ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 44 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சமய மாநாட்டில் கலந்துகொண்ட 1,480 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 4,167 பேருக்கு ரத்தப் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட நேற்று வரை 763 பேருக்கும், இன்று 70 பேருக்கும் என 833 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்காக 3,371 வெண்டிலேட்டர்களும், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

இன்று நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், சென்னையில் ஒன்பது பேருக்கும், கோயம்புத்தூரில் 26 பேருக்கும், கடலூரில் ஒருவருக்கும், திண்டுக்கல்லில் எட்டு பேருக்கும், ஈரோட்டில் இரண்டு பேருக்கும், கன்னியாகுமரியில் ஒருவருக்கும், நீலகிரியிஸ் மூன்று பேருக்கும், ராணிப்பேட்டையில் ஒன்பது பேருக்கும், திருவண்ணாமலையில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் இரண்டு பேருக்கும், விழுப்புரத்தில் மூன்று பேருக்கும் என மொத்தம் 77 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 172
2 கோயம்புத்தூர் 86
3 ஈரோடு 60
4 திருச்சி 36
5 திருப்பூர் 26
6 மதுரை 25
7 சிவகங்கை 6
8 காஞ்சிபுரம் 6
9 திருநெல்வேலி 56
10 தூத்துக்குடி 24
11 நாமக்கல் 41
12 தேனி 40
13 செங்கல்பட்டு 40
14 திண்டுக்கல் 54
15 ராணிப்பேட்டை 36
16 கரூர் 23
17 விழுப்புரம் 23
18 திருப்பத்தூர் 16
19 திருவள்ளூர் 14
20 கன்னியாகுமரி 15
21 சேலம் 14
22 கடலூர் 14
23 திருவாரூர் 13
24 நாகப்பட்டினம் 12
25 விருதுநகர் 11
26 தஞ்சாவூர் 11
27 வேலூர் 11
28 திருவண்ணாமலை 10
29 நீலகிரி 7
30 தென்காசி 3
31 கள்ளக்குறிச்சி 3
32 ராமநாதபுரம் 2
33 அரியலூர் 1
34 பெரம்பலூர் 1

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details