தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையின் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி பிற மாவட்டங்களில் சென்னைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ராயபுரம், தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவருகிறது. இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களில் விழுக்காடும் அதிகரித்தும், குணமடைத்தவரின் விழுக்காடும் குறைந்தும் வருகிறது.
நேற்று முன்தினம் 88 விழுக்காடாக இருந்த குணமடைத்தவரின் வீதம் நேற்று 87 விழுக்காடாக குறைந்தது. மேலும் நேற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் விழுக்காடு 10-லிருந்து இன்று 11 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதுவரையில், சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 389 நபர்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 585 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 223 நபர்களும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டாயிரத்து 581 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் படி,
கோடம்பாக்கம் - 1631 பேர்
அண்ணா நகர் - 1481 பேர்
ராயபுரம் - 765 பேர்