தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 76 ஆயிரத்தை கடந்தது கரோனா!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

By

Published : Jul 12, 2020, 3:07 PM IST

சென்னையில் கரோனா உயர்வு
சென்னையில் கரோனா உயர்வு

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றானது ஜூலை 7ஆம் தேதி 70 ஆயிரத்தை கடந்திருந்த நிலையில், தற்போது 76 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது தினமும் அதிகரித்து கொண்டே இருந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 56 ஆயிரத்து 947 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியான பட்டியலாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

ராயபுரம் 9517
தண்டையார்பேட்டை 8144
தேனாம்பேட்டை 8465
கோடம்பாக்கம் 8491
அண்ணா நகர் 8502
திருவிக நகர் 6078
அடையாறு 4827
வளசரவாக்கம் 3773
அம்பத்தூர் 3647
திருவெற்றியூர் 2927
மாதவரம் 2422
ஆலந்தூர் 2073
பெருங்குடி 1979
சோளிங்கநல்லூர் 1650
மணலி 1383

என மொத்தம் 15 மண்டலங்களில் 76 ஆயிரத்து 158 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1221 நபர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட்-19 நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

ABOUT THE AUTHOR

...view details