தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 4:13 PM IST

ETV Bharat / state

எஃப்ஐஆர்-ஐ ரத்துசெய்ய ரூ.6,000 கையூட்டுப் பெற்ற நுண்ணறிவுப் பிரிவு காவலர்!

வாகனத் திருட்டுப் புகாரில் முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்வதற்கு ஆறாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற நுண்ணறிவு காவலரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

intelligence police bribery  triplicane
எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யவதாக கூறி ரூ. 6ஆயிரம் லஞ்சம் பெற்ற நுண்ணறிவு பிரிவு காவலர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (26), கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், சசிக்குமாரிடம் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர் என அறிமுகம் செய்துகொண்ட மணி என்பவர் வாகனம் திருடுபோனது குறித்து கேட்டுள்ளார்.

இதற்கிடையில், திருடுபோன வாகனம் சசிக்குமாருக்கு கிடைக்க, இந்தத் தகவலை மணி என்பவரிடம் கூறியுள்ளார். மேலும், தான் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையை என்ன செய்வது என்றும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை தான் ரத்து செய்துவிடுவதாகவும், அதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் கூறிய மணி, முன்பணமாக சசிக்குமாரிடம் ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஓரிரு தினங்களில் சசிக்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு மீதிப்பணத்தை தருமாறு அவர் வற்புறுத்தியுள்ளார்.

இதன்பின்பு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த காவலர் மணி மீது சசிக்குமார் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், நுண்ணறிவுப் பிரிவு காவலர் மணிமாறன் தன்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர் என்று சசிக்குமாரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பணம் பெற்றது தெரியவந்தது.

சசிக்குமாரிடமிருந்து பெற்ற ஆறாயிரம் ரூபாயை மணிமாறனிடமிருந்த பெற்ற காவல் துறையினர் அதனை சசிக்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்தத் தகவல் அறிந்த உயர் அலுவலர்கள் மணிமாறனிடம் விசாரணை நடத்திவருவதோடு, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

இதையும் படிங்க:காரில் வந்த குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: காவல் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details