இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது விலங்குகளுக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்துவது நமது தேசிய கடமை; இதற்கு மக்கள் முயற்சி செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிறு குழந்தைகளுக்கு கரோனா வராது என அலட்சியமாக இருக்க வேண்டாம். மூன்றாம் அலையில் வருவதற்குகூட வாய்ப்புள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக திருமணத்திற்கும், நண்பர்களைச் சந்திக்கவும் வெளியே செல்ல வேண்டாம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.