தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூத்த குடிமக்கள் புகார்களில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை!

மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாள்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பாக்கப்படுவார் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

’மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கும் புகார்களில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை..!’ - தமிழ்நாடு அரசு
’மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கும் புகார்களில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை..!’ - தமிழ்நாடு அரசு

By

Published : May 5, 2022, 9:10 AM IST

சென்னை: கொடுங்கையூரை சேர்ந்த சதாசிவம் (66) என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மகன் மதன், தனக்கு சொந்தமான சொத்து ஆவணங்களை அபகரித்துச் சென்றுவிட்டார். அந்த ஆவணங்களை மீட்டுதர வேண்டும். மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த ஆண்டு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முழுவதும் வருவாய் கோட்டாசியர்களிடம் நிலுவையில் உள்ள மூத்த குடிமக்களின் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நிலுவையிலுள்ள வழக்கு விவரங்கள் குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வருவாய் கோட்டங்களில் 292 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்களின் மீது 90 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத கோட்டாசியர்கள் பொறுப்பாக்கப்படுவர் என எச்சரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, மீண்டும் ஜுன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அவலம் - ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முயற்சியில் அரசு... பரிதவிக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details