தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயிலர் படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்!!

ஜெயிலர் திரைப்படம் அரசு நிர்ணயித்த காட்சிகளை விட கூடுதலாகவும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்க உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 7, 2023, 3:16 PM IST

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை வேப்பேரியில் அமைந்து உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தேவராஜன் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் வருகிற 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சென்னை சுற்றிய திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்த 4 காட்சிகளை தாண்டி 6 காட்சிகள் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்களிடம் இருந்து 1500 கோடி ரூபாய் வரை திரையரங்க உரிமையாளர்கள் கொள்ளையடித்து வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்களிலும் அரசு உத்தரவை மீறி செயல்பட்டு வருவதாகவும், அரசாணை படி சிறப்பு குழுவை அமைத்து அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:’இதெல்லாம் தலைவருக்கு மட்டும் தான் நடக்கும்’... தனியார் நிறுவன அறிவிப்பால் மார்தட்டி கொள்ளும் ரஜினி ரசிகர்கள்!!

மேலும் நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு பட சிறப்பு காட்சி ஒளிப்பரப்பிய போது அவரது ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தின் போது லாரியிலிருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் ஜெயிலர் படக்காட்சி வெளியிடாமல் தடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் ஜெயிலர் திரைப்படம் தொடர்பாக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை திருப்பி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என புகாரில் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஜெயிலர் படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Jailer Pre-Booking: விறுவிறுப்பான முன்பதிவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்!

ABOUT THE AUTHOR

...view details