இந்திய வங்கி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
'கரோனாவால் உயிரிழக்கும் தற்காலிக வங்கி பணியாளர்களின் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்'
சென்னை: கரோனா தொற்றால் உயிரிழக்கும் தற்காலிக வங்கி பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய வங்கி தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கடிதத்தில், "கரோனாவால் பாதிக்கப்படும் தற்காலிக வங்கி பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து விதமான பணியாளர்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றையும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய சி.எச்.வெங்கடாச்சலம், "தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் காரணமாக வங்கி பணியாளர்களோ அல்லது தற்காலிக வங்கி பணியாளர்களோ பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் பணியாற்ற வேண்டும். இதனால் தற்காலிக பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், நிரந்தர பணியாளர்களை போல் அவர்களது குடும்பதுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கிகள் அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
TAGGED:
கொரோனா வைரஸ் இழப்பீடு தொகை