தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 8 நீதிபதிகள் - கொலிஜியம் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக எட்டு நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

By

Published : Jan 19, 2023, 9:33 PM IST

Collegium
Collegium

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மொத்த நீதிபதிகளுக்கான இடம், 75. இதில், நீதிபதிகள் சிலர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 52ஆக உள்ளது. காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை நிரப்பும் வகையில் 18 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தேர்வுக் குழுவிற்கு, உயர் நீதிமன்ற தேர்வுக் குழு அனுப்பி இருந்தது.

இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடி ஆலோசனை நடத்தியது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள பி.லட்சுமி நாராயணன், எல்.சி. விக்டோரியா கௌரி, எஸ்பிபி பாலாஜி, ஆர். நீலகண்டன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோரும், மாவட்ட நீதிபதிகளாக உள்ள வடமாலை, கலைமதி மற்றும் திலகவதி ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விரைவில் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:"காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்"

ABOUT THE AUTHOR

...view details