சென்னை:தாம்பரம் அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோபிநாத் (வயது-44).இவர் மனைவியுடன் குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் கோபிநாத்தை பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.