தமிழ்நாடு

tamil nadu

ராணிப்பேட்டையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திறந்துவைத்த முதலமைச்சர் - என்னென்ன தெரியுமா?

By

Published : Jun 30, 2022, 7:16 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

இராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71,103 பயனாளிகளுக்கு ரூ.267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 30) வழங்கினார்.

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம்:ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், 13.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரக கட்டடம், தரை தளம் 5684 ச.மீ பரப்பளவிலும், முதல் தளம் 5500.50 ச.மீ பரப்பளவிலும், இரண்டாம் தளம் 6003 ச.மீ பரப்பளவிலும், மூன்றாம் தளம் 5325 ச.மீ பரப்பளவிலும், நான்காம் தளம் 5325 ச.மீ பரப்பளவிலும், ஐந்தாம் தளம் 623 ச.மீ பரப்பளவிலும், முகப்பு மண்டபம் 250.50 ச.மீ பரப்பளவிலும் என மொத்தம் 28,711 ச.மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

உயர் கல்வித்துறை சார்பில் 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம், நீர்வளத்துறை சார்பில் 5.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரக்கோணம் வட்டம், அரிகில்பாடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தளமட்ட சுவர் (தடுப்பணை) என மொத்தம் 150 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிலான 24 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள்

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகள்:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 10.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னிகாபுரம்- பொன்னமங்கலம் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர் மட்டப் பாலம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 7.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணிபேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்படவுள்ள புதிய பணிமனைக் கட்டடங்கள் (Work Shop), கால்நடை பரமாரிப்புத்துறை சார்பில் 48.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆற்காட்டில் கட்டப்படவுள்ள கால்நடை மருந்தகம் என மொத்தம் 22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நலத்திட்ட உதவிகள்

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்:தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 14,828 பயனாளிகளுக்கு உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 5133 பயனாளிகளுக்கு தனிநபர் பண்ணைக்குட்டை அமைத்தல், பிரதமர் குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட உதவிகள்,

ஊரக நலப்பணிகள் சார்பில் 1740 பயனாளிகளுக்கு முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் உதவிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 1567 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்ட வைப்புத்தொகை பத்திரம் உள்ளிட்ட உதவிகள்,

மேலும், கூட்டுறவுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பால்வளத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 71,103 பயனாளிகளுக்கு 267 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள அரசு நலத்திட்டங்களை இன்று விழாவில் முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு - பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details