சென்னை:தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ( ஏப்.10 ) மாலை ஒப்புதல் அளித்துள்ளார். இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரவையில் இன்று ( ஏப்.10 ) ஆன்லைன் ரம்மி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனி தீர்மானத்தின், ஆன்லைன் தடை சட்டம் குறித்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் நிறித்தி வைத்திள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் நிர்வாக இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டினோம்.