தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11,12ஆம் வகுப்பு துணைத் தேர்வு : விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யும் தேதி அறிவிப்பு

சென்னை : 11,12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை வரும் 18ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Class 11,12 Sub-Examination: Notice of Date of Downloading Copies
Class 11,12 Sub-Examination: Notice of Date of Downloading Copies

By

Published : Nov 16, 2020, 5:24 PM IST

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளை எழுதிய மாணவர்களில் சிலர், விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் வரும் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்க விரும்பினால், தேர்வர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். தொடர்ந்து விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 19, 20ஆம் தேதிகளில் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்" என்றும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details