தமிழ்நாடு

tamil nadu

11ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் பதிவிறக்கம் குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு!

By

Published : Aug 25, 2020, 10:51 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் வேண்டுமென விண்ணப்பித்த மாணவர்கள் ஆகஸ்ட் 26 முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல்

அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வினை எழுதி விடைத்தாள் நகல் வேண்டுமென விண்ணப்பித்த மாணவர்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதி மதியம் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களின் பதிவெண், பிறந்த தேதியைப் பதிவுசெய்து அவர்கள் விண்ணப்பித்த பாடங்கள் கூறிய விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அந்த விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து இரண்டு நகல்கள் எடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதிமுதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தையும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திருக்குறளில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பிரதமர் மோடிக்கு உள்ளன'

ABOUT THE AUTHOR

...view details