தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கெடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கெடுக்கின்ற சட்டம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

Citizenship Amendment Act is a Violence Act - Velmurugan
குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கேடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்

By

Published : Mar 3, 2020, 10:35 PM IST

டெல்லி வன்முறையை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “ மத்திய அரசின் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கெடுக்கின்ற சட்டம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் தேசம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து கலவரத்தை உண்டாக்கி வருகின்றது.

இஸ்லாமியர்கள் என்பதற்காகவே கொன்று குவிப்பதை கண்டிக்கும் விதத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். காந்தி மண் என சொல்லப்பட்டுவந்த இந்திய மண்ணில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் தேசம் எங்கு செல்கின்றது என்றே தெரியவில்லை. பொதுசமூகம், இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். அவர்கள் டெல்லியில் நடத்தியதைப் போல நாளை சென்னையில் நடத்துவோம் என கொக்கரிப்பதை நாங்கள் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறோம் என தவறாக நினைத்துவிடாதீர்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கேடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்

இது பெரியார் மண் இங்கே எந்த கொம்பனாலும் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. தடியும் கொடியும் எங்களிடமும் இருக்கிறது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது. இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எவ்வளவு அடக்குமுறைகளை ஏவினாலும் அதை எதிர்கொள்வோம். இது நம் வாழ்வுரிமைக்கான போராட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டங்களை பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள்கூட நிறைவேற்ற மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடி அரசு மட்டும் அது தொடர்பாக அமைதிக்காக்கின்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கேடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்

அதிமுக, பாமக ஆகிய 11 ஓட்டுகள் ஆதரித்து போட்டதால் இன்று நாம் வீதியில் உள்ளோம். சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கேட்டால் அதனை அதிமுக நிராகரித்தது. பாஜகவுக்கு சேவகம் செய்யும் அரசாகவே அதிமுக அரசு உள்ளது, அது தமிழர்களுக்கான அரசாக செயல்படவில்லை. இந்த அடிமை அரசை, தமிழ்நாட்டு மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் ஓயாது. நாட்டு மக்களை அச்சுறுத்தும் இந்தச் சட்டங்களை கைவிட்டுவிட்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கேடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்

இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : கழிவுநீர் பிரச்னையை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்: பொதுமக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details