சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மித்லிஷ் குமார் - துர்கா தேவியின் தம்பதியினரின் நான்கு வயது சிறுவன் நேற்று (செப்.19) காணாமல் போன நிலையில், சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அப்போது அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்துவந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோனு ஆகியோர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
சிறுவன் மீட்பு
பின்னர் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவல் துறையினர், சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் உதவியுடன் நாக்பூரில் உள்ள காவலர்களை தொடர்புகொண்டு சிறுவனை கடத்தியவர்களை தேடினர்.
இந்நிலையில் நாக்பூர் ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் ரயிலில் இறங்கியதும் அங்கிருந்த ரயில்வே காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினர் சிறுவனை மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!