தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறக்க மாநில அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை.
திரையரங்குகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை...!
சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து அக்டோபர் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து திரையரங்குகளை திறக்க கோரி மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து திரையரங்குகளை தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் திறப்பது குறித்து அக்டோபர் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒவ்வொரு மாத இறுதியில் அடுத்தக்கட்ட பொது முடக்கத்தை அறிவிக்கும் முன்பு, மருத்துவ நிபுணர் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது போன்றே இந்த மாதமும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.