தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாகத் திருவாரூர் சென்றுள்ளார். திருவாரூர் உள்ள கலைஞர் இல்லத்திற்குச் சென்ற அவர் அங்கு மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மாலையில் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்குச் சென்றார். பின்னர் காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மணிமண்டப பணிகளைப் பார்வையிட்டார்.
நாளை காலை மன்னார்குடியில் நடைபெறும் கட்சி பிரமுகர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்ள உள்ள அவர் இரவு திருவாரூரில் சன்னதி தெருவில் தங்குகிறார். முன்னதாக திருவாரூர் கமலாலயம் குளத்திற்குச் சென்ற அவர் அதன் கரைகளில் அமர்ந்து பல நினைவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.