சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 10 லாரிகள் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கிடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.26) தொடங்கி வைத்தார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய முதலமைச்சர் முன்னதாக உத்தரவிட்டிருந்த நிலையில், சிப்காட் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் என மொத்தம் 40 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் இறக்குமதி செய்ய ஆணை வழங்கப்பட்டது.
இதுவரை, 515 உருளைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதோடு, 1,750 ஆக்சிஜன் ஒழுங்குப்படுத்தும் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதம் விரைவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.