தமிழ்நாடு

tamil nadu

நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Feb 8, 2021, 3:21 PM IST

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் 94 தட்டச்சர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Chief Minister issued the order for highway department typewriters Employment
Chief Minister issued the order for highway department typewriters Employment

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(பிப்.8) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்கு உட்பட்ட சென்னை வெளிவட்ட சாலையின் இரண்டாம் கட்டமாக 1025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலை பிரதான சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும் , பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட , சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி (தேசிய நெடுஞ்சாலை-716 ) முதல் பாடியநல்லூர் (தேசிய நெடுஞ்சாலை-16) வழியாக திருவொற்றியூர் - பொன்னேரி பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் நெடுஞ்சாலைத் துறையில் 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details