தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கரோனா பரவல் வேகம் குறைந்தப்பாடில்லை. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும், 36 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கடந்த மூன்று நாள்களாக, கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி வருகிறது. இதைக் குறிப்பிட்டு, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு நாளை மறுநாள் (மே.24) முடிவடைய இருக்கிறது. இந்தநிலையில் மருத்துவக் குழு, சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.22) காலை 10மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.