தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் விபத்து - ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: தாம்பரம் அருகே விபத்தில் காயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

வட்டாட்சியர் அலுவலக கார் ஓட்டுனர் உயிரிழப்பு
வட்டாட்சியர் அலுவலக கார் ஓட்டுனர் உயிரிழப்பு

By

Published : Apr 27, 2020, 3:58 PM IST

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் ராம்குமார் என்பவர், மாடம்பாக்கம் அம்பிகா நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அசோக் நகரைச் சேர்ந்த தனியார் ஓட்டுநர் சந்திப் என்பவர், மாடம்பாக்கம் மெயின் ரோட்டிலிருந்து ராஜகீழ்ப்பாக்கம் சாலை வழியாக செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானது.

வட்டாட்சியர் அலுவலக கார் ஓட்டுனர் உயிரிழப்பு

உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். ஆனால் வழியிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், சந்திப் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அதில் பயணம் செய்த தாசில்தார் ராம்குமார் காயமின்றி உயிர் தப்பினார். இது தொடர்பாக சேலையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!

ABOUT THE AUTHOR

...view details