சென்னை: புறநகர் பகுதிகளில் சில நாட்களாக காலை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம்,குரோம்பேட்டை , பம்மல், மீனம்பாக்கம், சேலையூர் , வண்டலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி,மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து தாம்பரம் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது இதனால் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்க்கு தாம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் இரண்டு கிலோ மீட்டர் வரை சுற்றி செல்கின்றனர்.