தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மீறியதாக சுமார் 10 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு!

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 136 நாள்களில் ஒன்பது லட்சத்து 43 ஆயிரத்து 745 பேரை காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Lockdown violation
Lockdown violation

By

Published : Aug 7, 2020, 2:10 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 136 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 43 ஆயிரத்து 745 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது.

அதேபோல் ஆறு லட்சத்து 67 ஆயிரத்து 991 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 19 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 151 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்கொடுமை: காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details