தமிழ்நாடு

tamil nadu

'அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம்' - மாநகர காவல்துறை ஆணையர்

By

Published : Jul 5, 2020, 8:35 PM IST

சென்னை: அத்தியாவசிய தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார்.

மாநகர காவல்துறை ஆணையர்
மாநகர காவல்துறை ஆணையர்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை அமைந்தகரை அருகில் உள்ள அண்ணா வளைவில், மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அங்கு நடைபெற்ற வாகனச் சோதனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த முழு ஊரடங்கிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஊரடங்கின் போது வெளியே வரக்கூடாது என்று விழிப்புணர்வு உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வராமல் இருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக வியாபாரிகளுடன் காவல்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சானிடைசர் வைத்திருக்க வேண்டும். தகுந்த இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அறிவுறுத்தப்பட்டன. மேலும், 144 தடை உத்தரவை மீறிய ஒரு லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 87 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details