சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச் 20) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 21-ல் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 22, 23ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெலாந்துறை (கடலூர்) 9 செ.மீ, அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) 8 செ.மீ, தொழுதூர் (கடலூர்) 8 செ.மீ, வேப்பூர் (கடலூர்) 7 செ.மீ, கீழச்செருவாய் (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 6 செ.மீ, தேவக்கோட்டை (சிவகங்கை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 5 செ.மீ, ஆரணி (திருவண்ணாமலை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பூடலூர் (தஞ்சாவூர்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), ஏத்தாப்பூர் (சேலம்), தண்டையார்பேட்டை (சென்னை), கடலூர், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), காரைக்கால் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
காட்டுமயிலூர் (கடலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருத்தணி (திருவள்ளூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), லால்குடி (திருச்சி மாவட்டம்), செங்கல்பட்டு, பூண்டி (திருவள்ளூர்), செம்மேடு (விழுப்புரம்), மிமிசல் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), முசிறி (திருச்சி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), குளித்தலை (கரூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), திருச்சி நகரம், வீரகனூர் (சேலம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), புலிப்பட்டி (மதுரை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Budget 2023: பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை அறிவிப்புகள் விபரம்!