தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:மாநகர் முழுவதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court order to remove the bikes from chennai Pavement

By

Published : Nov 19, 2019, 4:02 PM IST

சென்னை மாநகரில் நடைபாதைகளை முறையாக பராமரிக்க கோரிய வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது அவர்,தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல,எந்தெந்தப் பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேர அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுத்து வருவதாகவும், ஓராண்டு காலத்திற்குள் இந்த திட்டம் முழுவதுமாக நடைமுறைபடுத்தபடும் எனவும் தெரிவித்தார்.

சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சென்னையில் 11 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 54 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ள நிலையில்,அதை கணக்கில் கொண்டு 65 வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருங்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 3 லட்சம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்திற்கு எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் அப்புறப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து சென்னை முழுவதும் உள்ள நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும்,தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: நடிகை காயத்ரி ரகுராமைக் கைது செய்ய மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு!

ABOUT THE AUTHOR

...view details