தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2022, 1:38 PM IST

ETV Bharat / state

சொத்து வரி செலுத்திய உரிமையாளருக்கு இதுவரை ரூ.2.50 கோடி ஊக்கத் தொகை - மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் 2022ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்திய உரிமையாளருக்கு இதுவரை 2.50 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில், சீராய்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய சொத்து வரி வீதம் மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.

எனவே 2022ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்தி வந்த கட்டண விகிதத்திலேயே நேற்றுக்குள் செலுத்தலாம் என ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 விழுக்காடு ஊக்கத்தொகை அல்லது அதிகபட்சமாக 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்ததது. தவறும் நபர்களுக்கு 2 விழுக்காடு தண்ட தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 12 லட்சம் கட்டிடங்களும், சுமார் 2 லட்சம் உரிமையாளர்கள் உள்ளனர். இந்தச் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாகவும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மறுசீராய்விற்கு பிறகான சொத்து வரி கட்டணம் மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முறையாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சொத்து உரிமையாளர்கள் 2022-23ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான மீதமுள்ள சொத்து வரியினை செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் நேற்றுடன் சொத்து வரி செலுத்த கடைசியாகும். கடந்த 15 நாள்களில் மட்டும் 119 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாகவும், கடைசி நாளான நேற்று மாலை 5 மணியுடன் 11 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்திய உரிமையாளருக்கு இது வரை 2.50 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சான்றிதழ்கள் தராமல் இழுத்தடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்: சிக்கலில் ஒரு லட்சம் பட்டதாரிகள்

ABOUT THE AUTHOR

...view details