தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் மதுபோதையில் சென்ற மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் வந்த மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு
முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் வந்த மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

By

Published : Jan 17, 2022, 7:42 AM IST

சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைவிட கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் உறுதி செய்யப்படுவதால், அந்தந்த மாநகராட்சிகள் கூடுதல் முக்கியத்துவத்துடன் கட்டுப்பாடுகளை கண்காணித்து வருகிறது.

இதனிடையே நேற்று (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சென்னை பெருநகர் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் வந்த மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

அந்த வகையில் சென்னை காசி திரையரங்கம் அருகே எம்ஜிஆர் நகர் காவல் நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் இருவர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்திய காவல்துறையினர் முக கவசம் ஏன் அணியவில்லை என கேட்டுள்ளனர்.

ஞாயிறு முழு ஊரடங்கு

இதில் மது போதையில் இருந்த சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகிருஷ்ணன் திடீரென காவலர் வளவந்தவனை தாக்கியுள்ளார். மேலும், போதையில் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனைக் காவலர் வளவந்தவன் தனது செல்போனை எடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர் போதையில் செய்யும் ரகளையை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் வந்த மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

பின்னர் இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அசோக் நகர் உதவி ஆணையர் தனபாலன் காவலரின் புகாரை எற்று விசாரிக்க மறுத்து குடிபோதையில் இருந்த மாநகராட்சி அலுவலருக்கு ஆதரவாகப் பேசி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் வந்த மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு

அசோக் நகர் உதவி ஆணையர் தனபாலனின் இந்த செயல் காவலர் வளர்ந்தவன் மற்றும் அவருடன் பணியில் இருந்த காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முழு ஊரடங்கு: காணும் பொங்கலன்று வெறிச்சோடிய சுற்றுலாத்தலம்

ABOUT THE AUTHOR

...view details