தமிழ்நாடு

tamil nadu

போகியை கோலாகலமாக்கிய மக்கள் - எப்படி தெரியுமா?

சென்னை: பொதுமக்கள் போகிப்பண்டிகையை முன்னிட்டு மேள தாளங்களுடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

By

Published : Jan 15, 2020, 1:54 PM IST

Published : Jan 15, 2020, 1:54 PM IST

சென்னை போகிபண்டிகை கொண்டாட்டம் போகிபண்டிகை கொண்டாட்டம் போகிப்பண்டிகை Chennai Bogi Festival Celebaration Bogi Festival Celebaration Bogi Festival
Bogi Festival Celebaration

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கேற்ப தை பிறக்கும் முன், முதல் நாள் வருவது போகிப்பண்டிகை என அழைக்கப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப போகி பண்டிகை சென்னை செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் தங்கள் கவலைகள் துன்பங்களை மறந்து வீட்டிலுள்ள பழைய, தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றை வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தி புதிதாக பிறக்கும் தை மாதத்தை வரவேற்பதே போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டது.

அதேபோல், போகியை முன்னிட்டு பொதுமக்கள் வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களுடன் தங்கள் கவலைகளையும், துன்பங்களையும் சேர்த்து தீயிலிட்டு கொளுத்தி மேள தாளங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

போகிப் பண்டிகை கொண்டாட்டம்

இதையும் படிங்க:

போகி: புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை!

ABOUT THE AUTHOR

...view details